Monday, December 31, 2012

புதிய தலைமுறை

                       சத்தமில்லாமல் ஒரு சமூகப்பணி 

                                                                                   இனி ஒரு விதி செய்வோம் 

 • நான் இந்த பதிவில் புதியதலைமுறை வார இதழ் பற்றி குறிப்பிட விரும்புகின்றேன்,பதிவர்கள் அனைவருக்கும் மிகவும் பரிச்சயமான இதழ்தான் என்றாலும்,புதியதலைமுறையின் இன்னொரு சமூகப் பணியை பற்றி இந்த பதிவில்  குறிப்பிடுகிறேன் .

புதிய தலைமுறை அறக்கட்டளை : 

 • இளைஞர்களை மையமாகக் கொண்டு  ஓர் அமைதியான,வளமான,மகிழ்ச்சியான சமுதாயத்தை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் உருவாக்குவதே புதியதலைமுறை அறக்கட்டளையின் குறிக்கோள் ஆகும்,
 • புதியதலைமுறை அறக்கட்டளை ஒரு அரசுசாரா தொண்டு நிறுவனமாகும் 
 • புதிய தலைமுறை வார இதழ் ஓராண்டை நிறைவு செய்த பின்,(நவம்பர் 11,2010)அன்று புதிய தலைமுறை அறக்கட்டளை ஆரம்பிக்கப்பட்டது 

      என்ன செய்தோம் :


 • தமிழகம் மற்றும் புதுச்சேரியில்  இதுவரை  800க்கும் மேற்பட்ட  சமூக விழிப்புணர்வு நிகழ்சிகளை நடத்தியும்,150க்கும் மேற்பட்ட கல்வி மேம்பாட்டு மையங்களையும் 
  , 3 இளைஞர் திறன் மேம்பாட்டு மையங்களையும் 
   துவக்கி செவ்வனே செயல்பட்டு வருகின்றது 

புதியதலைமுறை அறக்கட்டளை அறங்காவலர்: 


 •  புதிய தலைமுறை வார இதழின் நிர்வாக ஆசிரியர் திரு.ஆர்.பி.சத்தியநாராயணன்.அண்ணாப் பொறியியல் பல்கலைக் கழகத்தில் பொறியியல் பட்டமும்,அமெரிக்காவின் பாஸ்டன் நகரத்தில் உள்ள நார்த் ஈஸ்டன் பல்கலைக் கழகத்தில் முதுநிலைப் பட்டமும் பெற்றவர்.
 • திரு.ஆர்.பி.சத்தியநாராயணன்   அவர்கள் சமூகநலப் பணிகளில் ஆர்வம் கொண்ட இளைஞர் 


புதியதலைமுறை அறக்கட்டளையின் செயல் திட்டங்கள்:
 • புதிய தலைமுறை வாசகர் வட்டம் 
 • விதைகள் 
 • இலவச உயர் கல்வி 
 • கிராமப்புற கல்வி மேம்பாடு
 • இளைஞர் திறன் மேம்பாடு 

புதியதலைமுறை அறக்கட்டளையின் 18 நிர்மானப் பணிகள்:
 • 1.மரம் நடுதல் 
 • 2.புகையிலை தடுப்பு மற்றும் புற்றுநோய் விழிப்புணர்வு 
 • 3.சாலைப் பாதுகாப்பு மற்றும் முதலுவதி 
 • 4.சுற்றுச் சூழல்-புவி வெப்பமயமாதல்,மழைநீர் சேகரிப்பு 
 • 5.ஆளுமை திறன் மேம்பாடு 
 • 6.வேலைவாய்ப்பு முகாம் 
 • 7.தேர்வுகளை எதிர் கொள்வது எப்படி 
 • 8.சுய வேலைவாய்ப்பு பயிற்சி 
 • 9.இரத்த தான முகாம் 
 • 10.கண்,பல்,சருமம் மற்றும் பொது மருத்துவ முகாம் 
 • 11.நல்ல உணவு பழக்க வழக்கங்கள் 
 • 12.மின்சாரம் மற்றும் எரிசக்தி-சிக்கனம்,பாதுகாப்பு 
 • 13.இயற்கை வேளாண்மை 
 • 14.அடிப்படை கணினி 
 • 15.தகவல் அறியும்   சட்டம் 
 • 16.  நூலகம்  பயன்  படுத்துதல் 
 • 17.நுகர்வோர் பாதுகாப்பு 
 • 18.உயர்கல்வி வழிகாட்டி 
                
 •               மேலும் அடுத்தப்பதிவில் புதியதலைமுறை அறக்கட்டளையின் பல்வேறு சமூக நலப் பணிகளை இன்னும் விரிவாகப் பதிவிடுகிறேன்,

Tuesday, December 25, 2012

சிரிக்க,சிந்திக்க

                                  ஆறுக்கு மேல் ஐந்து 


          

வாழ்க்கையின் இரகசியம்


 • நீ இறக்கும்போது உனக்காக அழக்கூடியவர்களை உன் உயிருள்ளபோதே தேடி வைத்துக்கொள்!

Monday, December 24, 2012

உதவும் இதயம் ஒருநாளும் ஓயாது

                                               ஹிதேந்திரன் 
யார் இவர்,இவரைப்பற்றி பதிவுலகம் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும். 

கடந்த செப்டம்பர் 2008 அன்று நடந்த உண்மை சம்பவம் தான் இந்த பதிவு,ஹிதேந்திரன் டாக்டர் அசோகன்,புஷ்பான்சலி தம்பதியினரின் மூத்த மகன்.சென்னை திருக்கழுக்குன்றம் நகரில் வசிப்பவர்.திருக்கழுக்குன்றம் அடிவார வீதியில் "மனீஷ் கிளினிக்" என்ற பெயரில் மருத்துவமனை நடத்தி வருகின்றனர்.

ஹிதேந்திரன் தனது இருசக்கர வாகனத்தில்,நண்பரின்  வீட்டுக்கு சென்று விட்டு,தனது வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருக்கும்போது மீன்பாடி,வண்டி இடித்து கீழே விழுந்தார். விழுந்தவருக்கு தலையில் பலத்த அடி பட்டது.உடனே அவரை பக்கத்தில் இருந்தவர்கள் தூக்கி,அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்,அவருக்கு நினைவு திரும்பவில்லை,உடனே அவரை அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், அவரது பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப் பட்டது. ஹிதேந்திரனை பரிசோதித்த டாக்டர் ஹிதேந்திரன் மூளைச்சாவு அடைந்து விட்டதாக பெற்றோரிடம் தெரிவித்தனர்.

பெற்றோர் என்ன செய்தனர் தெரியுமா:
                                                                       ஹிதேந்திரன் உடல் உறுப்புகளை தானம் செய்தனர்,அவரது இதயம் ஒன்பது வயது சிறுவனுக்கு பொருத்தப் பட்டது 
அவர்களது மகன் இறந்த துக்கத்திலும்,இன்னொரு உயிர் பிழைப்பதற்காக உதவி செய்தது உண்மையிலே போற்ற பட வேண்டியது. 

இந்த பதிவை படித்துவிட்டு ஒருவராவது உடல் உறுப்பு தானம் செய்வார்கள் என்ற நம்பிக்கைதான். இந்த பதிவு, நான் எழுதவில்லை தினகரன் நாளிதழில் செப்டம்பர்24, 2008இல் வெளிவந்தது.

"ஹிதேந்திரன்" என்ற பெயருக்கு என்ன அர்த்தம்? "இதயத்தை கொள்ளை கொள்பவன்"  

               நன்றி தினகரன்