Tuesday, December 25, 2012

வாழ்க்கையின் இரகசியம்


  • நீ இறக்கும்போது உனக்காக அழக்கூடியவர்களை உன் உயிருள்ளபோதே தேடி வைத்துக்கொள்!
  • யாருடைய குறைகளை எண்ணிவிட முடியுமோ அவரே உண்மையில் உயர்ந்த மனிதர்!
  • பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது.
  • மணிக்கணக்கில் உபதேசம் செய்வதைவிடஒரு கணப்பொழுதாயினும் உதவி செய்வது மேல்!
  • அருகில் இருக்கும்போது கோபுரங்கள்கூட உயரமாகத் தெரிவதில்லை.தூரத்தில் இருக்கும் போதே பிரமாண்டமாகத் தெரிகின்றன.
  • மறக்க வேண்டியவைகளை மறக்காமல் நினைத்திருப்பதும் மறக்க வேண்டாதவகைகளை மறந்து விடுவதும் தான் இந்த உலகத்தின் இன்றைய துன்பங்களுக்கு காரணம்
  • ஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான் என்பது பெருமையல்லவிழுந்தபோதெல்லாம் எழுந்தான் என்பதுதான் பெருமை!
  • நன்றாகப் பேசுவது நல்லதுதான்ஆனால் நன்றாகச் செய்வது அதனிலும் நல்லது!
  • சில நேரங்களில் புத்தி வெற்றி பெறுகிறது.பல நேரங்களில் வெற்றியே புத்தியாகி விடுகிறது!
  • முட்டாளைச் சமாளிக்க சுருக்கமானமான வழிமெளனமாக இருப்பதுதான!
  • பல அறிஞர்களிடம் உறவாடினால் நீயும் அறிஞனாகிறாய்!
  • பல பணக்காரர்களுடன் உறவாடினால் பணக்காரனாக மாட்டாய்!
  • தோல்வி வந்தால் அது உனக்குப் பிரியமானதாகக் காட்டிக்கொள்!வெற்றி அடைந்தால் அது மிகவும் பழக்கப்பட்டதுபோல் காட்டிக்கொள்!
              இதுதான் வாழ்க்கையின் இரகசியம்!