Thursday, January 31, 2013

விண்டோஸ் 7 ஷார்ட் கட் கீகள்

விண்டோஸ் 7 ஷார்ட் கட் கீகள்கணனியில் வேலைகளை மிக சுலபமாகவும், துரிதமாகவும் செய்வதற்கு ஷார்ட் கட் கீகள் பயன்படுகின்றன.
விண்டோஸ் கீயுடன் சேர்த்து கீழ்க்கண்ட கீகளை அழுத்தினால் குறிப்பிட்ட செயல்பாடுகளை மேற்கொள்ளலாம்.
H: அப்போது செயல்பட்டுக் கொண்டிருக்கும் விண்டோவினை முழுத் திரைக்குக் கொண்டு செல்கிறது.
I: அப்போதைய விண்டோவினை மினி மைஸ் செய்கிறது அல்லது வழக்கமான அளவிற்குக் கொண்டு வருகிறது.
Shft+ Arrow: அப்போதைய விண்டோவினை அடுத்த திரைக்கு மாற்றுகிறது.
D: அனைத்து விண்டோக்களையும் மினி மைஸ் செய்து, டெஸ்க்டொப் திரையைக் காட்டுகிறது.
E: விண்டோஸ் எக்ஸ்புளோரர் திறக்கப்படும், My Computer Folder காட்டப்படும்.
F: தேடல் விண்டோ காட்டப்படும்.
G: உடன் இணைக்கப்பட்ட சாதனங்களைச் சுற்றிக் காட்டும்.
L: டெஸ்க்டொப்பினை லாக் செய்திடும்.
M: அப்போதைய விண்டோவினை மினி மைஸ் செய்திடும்.
R: ரன் விண்டோவினை இயக்கும்.
TAB: முப்பரிமாணக் காட்சி.

சிந்தனை

சிந்தனை 

ஒரு ஞானியை அணுகிய சீடன், காதலுக்கும் திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம் என்னவெனக் கேட்டான்.

அதற்கு அந்த ஞானி, "அது இருக்கட்டும். முதலில் நீ ரோஜாத் தோட்டத்துக்குப் போ. அங்கே உனக்கு எது உயரமான ரோஜாச் செடி என்று தோன்றுகிறதோ, அதை எடுத்துக் கொண்டு வா. ஆனால் ஒரு நிபந்தனை. நீ எக்காரணம் கொண்டும் போன வழியே திரும்பி வரக் கூடாது." என்றார்.

கிளம்பிய சீடன் சிறிது நேரம் கழித்து வெறும் கையுடன் வந்தான். ஞானி, "எங்கே உன்னைக் கவர்ந்த உயரமான செடி? " என்று கேட்டார்.

சீடன் சொன்னான், "குருவே, வயலில் இறங்கி நடந்த போது முதலில் உயரமான ஒரு செடி என்னைக் கவர்ந்தது. அதை விட உயரமான செடி இருக்கக் கூடும் என்று தொடர்ந்து நடந்தேன். இன்னும் உயரமான ரோஜாச் செடிகள் தென்பட்டன. அவற்றை விட உயரமான செடிகள் இருக்கக் கூடுமென மேலும் நடந்தேன். அதன் பிறகு தென்பட்டதெல்லாம் குட்டையான ரோஜாச் செடிகளே. வந்த வழியே திரும்ப வரக்கூடாது என்பதால் முன்னர் பார்த்த உயரமான செடியையும் கொண்டு வர முடியாமல் போய் விட்டது."

புன்முறுவலோடு ஞானி சொன்னார், "இது தான் காதல்!".

பின்னர் ஞானி, "சரி போகட்டும், அதோ அந்த வயலில் சென்று உன் கண்ணுக்கு அழகாகத் தெரிகின்ற ஒரு சூரிய காந்திச் செடியைப் பிடுங்கி வா. ஆனால் இப்போது கூடுதலாக ஒரு நிபந்தனை. ஒரு செடியைப் பிடுங்கிய பின் வேறு ஒரு செடியைப் பிடுங்கக் கூடாது."

சிறிது நேரத்தில் சீடன் ஒரு சூரிய காந்திச் செடியுடன் வந்தான். ஞானி கேட்டார், "இது தான் அந்தத் தோட்டத்திலேயே அழகான சூரிய காந்திச் செடியா? "

சீடன் சொன்னான், "இல்லை குருவே, இதை விட அழகான செடிகள் இருக்கின்றன. ஆனால் முதல் முறை கோட்டை விட்டது போல் இந்த முறையும் விட்டு விடக் கூடாது என்ற அச்சத்தில் முகப்பிலேயே எனக்கு அழகாகத் தோன்றிய இந்த செடியைப் பிடுங்கி வந்து விட்டேன். நிபந்தனைப்படி, ஒரு செடியைப் பிடுங்கியபின் வேறு செடியைப் பிடுங்கக் கூடாது என்பதால் அதன் பிறகு இதை விட அழகான செடிகளை நான் பார்த்தபோதும் பறிக்கவில்லை".

இப்போது ஞானி சொன்னார், "இது தான் திருமணம்!".

Wednesday, January 30, 2013

இணையத்தளங்​களை பார்வையிடு​ம்போது புகைப்படங்​களை தவிர்ப்பதற்​கு


இணையத்தளங்கள் அனைத்தும் அதிகளவில் புகைப்படங்கள் மற்றும் அனிமேஷன்களை உள்டக்கியதாகவே காணப்படுகின்றன.
எனினும் குறைந்த வேகம் உடைய இணைய இணைப்பான GSM/GPRS/EDGE போன்றவற்றில் இவ்வாறான இணையத்தளங்களை பார்வையிடும்போதும் 
மிகுந்த தாமதம் ஏற்படும். இத்தாமதத்தை தவிர்ப்பதற்கு பார்வையிட 
விரும்பும் இணையத்தளங்களிலிருந்து புகைப்படங்கள் தென்படுவதை தடுப்பது ஒரு சிறந்த வழிமுறையாகும்.
இதனை கூகுளின் குரோமில்  செயற்படுத்த முடியும்.

குரோம் உலாவியில் செயற்படுத்துவதற்கு

1. குரோம் உலாவியில் புகைப்படங்கள் தரவிறங்குதை தடை செய்யவேண்டிய இணையத்தளத்தினை ஓப்பன் செய்யவும்.
2.தொடர்ந்து குறித்த இணைப்பக்கத்திற்கான தவகல்களை பார்வையிடும் ஐகானை கிளிக் செய்யவும்.
3. அதன் பின்னர் தோன்றும் Drop Down மெனுவில் காணப்டும் புகைப்படத்திற்கான ஐகானை கிளிக் செய்து "Always Block on this Site" என்பதை தெரிவு செய்து தளத்தினை Refresh செய்யவும்.

கேள்வி கேட்பது எப்படி?

                         கேள்வி கேட்பது எப்படி?


                           பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,

 • நான் இந்த பதிவில் ஒரு இணையதளம் பற்றிய தகவலை கூற விரும்புகிறேன் 
 •  தொழில் நுட்ப பதிவர்கள் சகோ திரு. பிரபு கிருஷ்ணா அவர்களும், சகோ திரு.அப்துல் பாசித் அவர்களும் இணைந்து பதில்.காம் என்றொரு தளத்தை ஆரம்பித்து உள்ளனர். 
 •  பதிவர்கள் தங்களுக்கு ஏற்படும் தொழில் நுட்ப சந்தேகங்களை பதில்.காம் இல் கேட்டு தெரிந்து கொள்ளலாம்
                                 
                             தலைப்பை பார்த்ததும், “இது என்ன சிறுபிள்ளைத்தனமான கேள்வி?” என்று கூட நீங்கள் கேட்கலாம். ஆனால் பதில் தளத்தில் கேள்வி கேட்பது எப்படி? என்பதைப் பற்றித் தான் இங்கு பார்க்கப் போகிறோம்.
ask question
கேள்வி கேட்பதற்கு முன் நீங்கள் உங்கள் கணக்கு மூலம் உள்நுழைய வேண்டும்.
பதில் தளத்தின் Menu Bar-ல் உள்ள Ask a Question என்பதை க்ளிக் செய்தோ, அல்லது அதற்கு கீழே உள்ள பெட்டியிலோ உங்கள் கேள்விகளை கேட்கலாம்.
பிறகு கீழ்கண்ட பக்கம் வரும்,
The Question in one sentence – உங்கள் கேள்வியை சுருக்கமாக கேளுங்கள்
Category – கேள்வியின் பிரிவு மற்றும் உட்பிரிவை தேர்வு செய்யுங்கள்
More information for the question – உங்கள் கேள்வி பற்றி விரிவாக எழுதுங்கள்
அதற்கு கீழே ஒரு Check Box இருக்கும். உங்கள் கேள்விக்கு யாராவது பதில் அளித்திருந்தாலோ, கருத்து தெரிவித்திருந்தாலோ உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்ப வேண்டும் என்றால் அந்த Check Box-ல் டிக் செய்யுங்கள்.
பிறகு Ask the Question என்ற பட்டனை க்ளிக் செய்யுங்கள்.
கேள்வியில் மாற்றம் செய்ய வேண்டுமானால் Edit என்பதை க்ளிக் செய்து மாற்றம் செய்யலாம்.
அந்த கேள்விக்கு பதில் கிடைத்தப் பிறகு வேறு யாரும் பதில் சொல்ல வேண்டாம் என்று நினைத்தால் Close என்பதை க்ளிக் செய்ய வேண்டும்.
அந்த கேள்வியை நீக்க வேண்டும் என்றால் Hide என்பதை க்ளிக் செய்யுங்கள்.
வேறு சந்தேகங்கள் இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்!
                                                                                                                                
                                                                                                                          நன்றி 
                                                                                                சகோ திரு. பிரபு கிருஷ்ணா  
                                                                                                        சகோ திரு.அப்துல் பாசித் 
                                                                                                               நட்புடன் வேல் 
   

Monday, January 28, 2013

நவீன வசதிகளுடன் ஜிமெயில்

                  நவீன வசதிகளுடன் ஜிமெயில் 

       கூகுள் நிறுவனத்தின் ஜிமெயில் இணைய தளம் சில நவீன வசதிகளை அளித்துள்ளது,தற்போதைக்கு சோதனை இயக்கத்தில் இருக்கும், இவை விரைவில் முழுமையாக பயன்பாட்டுக்கு வரும், 
ஜிமெயில் பயன்படுத்துபவர்கள் தங்கள் ஜிமெயில் கணக்கில் உள்நுழைந்த உடன் புதிய இ-மெயில் செய்தி அனுப்பும் வகையில் கம்போஸ் அழுத்தவும் 

அதன்பிறகு  
Try out the new compose experience என்பதை கிளிக் செய்யவும் 

 அதன்பிறகு தங்கள் உடைய மின் அஞ்சல் கணக்கு ஒருமுறை லோட் ஆகி மேலே படத்தில் ள்ள இந்த விண்டோ தோன்றும்,மேலே படத்தில் தோன்றும் விண்டோவில் got it போன்ற பக்கம் உங்கள் மின் அஞ்சல் கணக்கில் தோன்றும், நீங்கள் god it என்பதை கிளிக் செய்ய வேண்டும்,

அதன்பிறகு தங்கள் உடைய மின் அஞ்சல் அனுப்பும் முறை(Compose Mail) கீழே படத்தில் உள்ளது போல   தோன்றும் 
மேலே தோன்றும் விண்டோவில் Recipients என்பதை கிளிக் செய்தவுடன் To என்ற ஆப்சன் தோன்றும்,இதில் நாம் மின் அஞ்சல் அனுப்பவேண்டிய முகவரியை டைப் செய் உடன் அவர்களது புகைப்படத்துடன் கூடிய மின் அஞ்சல் முகவரி தோன்றும்,இதனை கிளிக் செய்து மின் அஞ்சல் நாம் மின் அஞ்சல் அனுப்பலாம் 

                                   புகைப்படத்துடன் கூடிய மின் அஞ்சல் முகவரி 
மேலே தோன்றும் படத்தில் A  என்ற ஐ கானில் "கிளிக்" செய்து போர்மட்டிங் டூல்ஸ்களை பெறலாம்,எழுத்து அளவு மாற்றல்,போல்டு,அடிக்கோடு,என அனைத்து  வசதிகளையும் இதில் பயன் படுத்தலாம்,

இந்த ஐகானை  கிளிக் செய்து பைல்களை அட்டச் செய்து அனுப்பலாம் 

மேலும் இந்த வசதியைப் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கில் கிளிக் செய்யுங்கள்  

                                                                                                                                               வேல் 

Sunday, January 27, 2013

கணினியை சிறந்த முறையில் பராமரிக்க உதவும் புதிய மென்பொருள்

   கணினியை சிறந்த முறையில் பராமரிக்க உதவும் புதிய மென்பொருள்

 • விண்டோஸ் கணினிகளை சிறந்த முறையில் பராமரிப்பதற்கு உதவும் மென்பொருட்களில் முதலாவதாக விளங்கும் Advanced System Care - இன் புதிய புதிப்பான Advanced System Care 6.1 தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
 • தற்போது உலகெங்கிலும் சுமார் 150 மில்லியன் வரையான பயனர்களால் பயன்படுத்தப்பட்டு வரும் இம்மென்பொருளின் புதிய பதிப்பில் 
 • விண்டோஸ் கணினிகளுக்கான Tuneup, Security மற்றும் Admin tools ஆகிய அம்சங்கள் காணப்படும் இம்மென்பொருளில் மேலதிகமான சில அம்சங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன் முந்தைய 
   பதிப்பில் காணப்பட்ட சில குறைபாடுகளுக்கான தீர்வுகளும் அடங்கியுள்ளன.
 • IObit நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள இம்மென்பொருளானது இலகுவான பயனர் இடைமுகத்தினையும் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.                                                                                              
மென்பொருளை தரவிரக்கச் சுட்டி 

இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் நண்பர்களே.

                                                                                                                நட்புடன் வேல் 


Sunday, January 20, 2013

சத்தம் இல்லாமல் ஒரு சமூகப்பணி-4

          சத்தம் இல்லாமல் ஒரு சமூகப்பணி-4

                            
 • பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,நான் இன்றைய பதிவில் புதிய தலைமுறை அறக்கட்டளையின் இலவச் உயர்கல்வி திட்டத்தைப்பற்றிகுறிப்பிட விரும்புகின்றேன்,
 • புதியதலைமுறை அறக்கட்டளை பற்றிய பதிவுகள் பற்றி நான் ஏற்கனவே எழுதியுள்ளேன்,அதனை படிக்க

புதிய தலைமுறை  இலவச உயர்கல்வி திட்டம் 

 • புதிய தலைமுறை  வார இதழ் 2009ம் ஆண்டு 62 மாணவ,மாணவிகளுக்கும்,2010 ம் ஆண்டு 84 மாணவ,மாணவிகளுக்கும்,2011ம் ஆண்டு 123 மாணவ,மாணவிகளுக்கும் இலவச உயர்கல்வி அளித்து, அவர்களது வாழ்வில் ஒளியேற்றி வைத்துள்ளது.
 • மேலும் புதியதலைமுறை இலவச உயர்கல்வி திட்டதைப் பற்றிய அறிவிப்புகள்,வருடந்தோறும் புதியதலைமுறை வார இதழில் வெளியாகும், தகுதி உள்ளவர்கள் விண்ணப்பித்து பயன் பெறுங்கள்.
 • பதிவுலக நண்பர்களே இத்தகவலை அனைவருக்கும் சென்றைடைய செய்யுங்கள், 
                                                மிக்க நன்றி,                       
                                                                                                                         நட்புடன் வேல்  

Sunday, January 13, 2013

சத்தம் இல்லாமல் ஒரு சமூகப்பணி

              சத்தம் இல்லாமல் ஒரு சமூகப்பணி-3


கொஞ்சம் வேலைப்பளு அதிகம் இருந்த காரணத்தால் கடந்த ஒரு வாரமாக என்னால் பதிவெழுத  இயலவில்லை, மேலும் நான் இன்றைய பதிவில் புதியதலைமுறை அறக்கட்டளையின் மற்றும் ஒரு சமூகப்பணியினை பற்றி குறிப்பிட விரும்புகின்றேன், புதியதலைமுறை அறக்கட்டளை பற்றிய பதிவுகள் பற்றி நான் ஏற்கனவே எழுதியுள்ளேன்,அதனை படிக்க 
சத்தம் இல்லாமல் ஒரு சமூகப்பணி-1

சத்தம் இல்லாமல் ஒரு சமூகப்பணி-2

நான் இந்த பதிவில் புதியதலைமுறை அறக்கட்டளையின் கிராமப்புற கல்வி மேம்பாடு திட்டத்தை பற்றி குறிப்பிட விரும்புகின்றேன்,

      கிராமப்புற கல்வி மேம்பாடு :

                                         

 • புதியதலைமுறை அறக்கட்டளையின் கிராமப்புற கல்வி மேம்பாடு திட்டத்தின் மூலம்,கிராமப்புற பள்ளிகளின் நிலை குறித்து விரிவாக ஆய்வு செய்து ,அதன் அடிப்படையில் தேவையான பள்ளிகளுக்கு அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்படுகின்றது .
 • மேலும் சேவை மனப்பான்மை உள்ள இளைஞர்களையும்,மற்றவர்களையும் கண்டறிந்து அவர்கள் மூலம் காலையிலும்,மாலையிலும் பள்ளி மாணவ,மாணவிகளுக்கு இலவச பாடசாலை(Free Tuition Centre)  தொடங்கப்பட்டுள்ளது.
 • கிராமப்புற கல்வி மேம்பாடு திட்டம், கிராமப்புறத்தில் உள்ள அடித்தட்டு மக்களை மனதில் கொண்டு,அவர்களுடைய முன்னேற்றத்திற்காகவும்,வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் புதியதலைமுறை அறக்கட்டளையால் உருவாக்கப்பட்டுள்ளது 
 • கிராமப்புற கல்வி மேம்பாடு திட்டத்தின் மூலம் தமிழ்நாடு  முழுவதும் புதியதலைமுறை அறக்கட்டளையால் 180க்கும் மேற்ப்பட்ட இலவச கல்வி மையம் துவங்கப்பட்டு வெற்றிகரமாக நடைபெற்று வருகின்றது.
 • மேலும் இந்த திட்டத்தின் மூலம் தகுதி உள்ள ஏழைக் குழந்தைகளைக் கண்டறிந்து அவர்களுக்கு இலவச மாலைநேர கல்வி அளிப்பதே கிராமப்புற கல்வி மேம்பாடு திட்டத்தின் தலையாய நோக்கமாகும்.
 • இந்த திட்டத்தில் சேர்ந்து பயன் அடைய விரும்புவர்கள்   
 •   இங்கே கிளிக் செய்யுங்கள் புதியதலைமுறை அறக்கட்டளையின் கிராமப்புற கல்வி மேம்பாடு திட்டம்    
 • மேலும் புதிய தலைமுறை அறக்கட்டளையின் ஊழியர்களை தொடர்பு கொண்டு கிராமப்புற கல்வி மேம்பாடு திட்டத்தின் மூலம் பயன் அடைய அனைவருக்கும் வாழ்த்துக்கள் 

தொடர்புக்கு: 

புதிய தலைமுறை அறக்கட்டளையின் ஊழியர்களை தொடர்பு கொள்ள   இங்கே கிளிக் செய்யுங்கள்  புதிய தலைமுறை அறக்கட்டளை ஊழியர்கள்

 • மேலும் இந்தப் பதிவினை பற்றி தாங்கள் என்ன நினைக்கின்றிர்களோ அதனை பின்னூட்டத்தில் குறிப்பிடுங்கள்,அது என்னை மேலும் நன்றாக பதிவெழுத  ஊக்கப்படுத்தும் .  மிக்க நன்றி  
                                                                                                                   நட்புடன் வேல் 

Thursday, January 3, 2013

சத்தம் இல்லாமல் ஒரு சமூகப்பணி-2

         சத்தம் இல்லாமல் ஒரு சமூகப்பணி-2

புதியதலைமுறை அறக்கட்டளையின் பல்வேறு சமூக நலப்பணிகளைப் பற்றி சென்ற  பதிவில் எழுதியிருந்தேன்,அதனை படிக்காதவர்கள் படிக்க  சத்தம் இல்லாமல் ஒரு சமூகப்பணி-1 

மேலும் புதியதலைமுறை அறக்கட்டளையின் பல்வேறு சமூக நலப்பணிகளைப் பற்றி இந்த  பதிவில் பார்க்கலாம் 

புதியதலைமுறை வாசகர் வட்டம்:

 •  புதியதலைமுறை  வாசகர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் ஏற்படுத்தப்பட்டது புதியதலைமுறை வாசகர் வட்டம்.
 •  புதிய தலைமுறை அறக்கட்டளையின் உறுப்பினராக இணைவதன் மூலம் தாங்களும் சமூகத்திற்கு தங்களது பங்களிப்பை செய்ய இயலும்.

  விதைகள்:               

 •   நீங்கள் வளரவும்,உங்களில் பல விழுதுகள் வேறூன்றவும்   புதிய தலைமுறை அறக்கட்டளையால் துவங்கப் பட்டது இந்த விதைகள் என்னும் திட்டம்     
 • தற்போது விதைகள் திட்டம் சென்னை,காஞ்சிபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் செயல்பட்டு வருகின்றது.

 • விதைகள் திட்டத்தின் மூலம் புதிய தலைமுறை அறக்கட்டளை என்ன செய்தது:

 • விதைகள் திட்டத்தின் மூலம் புதிய தலைமுறை அறக்கட்டளை என்ன செய்தது:படித்து முடித்து விட்டு,வேலை வாய்ப்பில்லாமல் உள்ள இளைஞர்களை தேர்வு செய்து,அவர்களுக்கு ஒரு தொழிலை கற்றுகொடுத்து,அவர்களுக்கு ஒரு குழுவாக செயல்பட வைத்து,ரெப்கோ வங்கியின் மூலம்  கடன் உதவி பெற்று,படித்து முடித்த இளைஞர்களின் வாழ்வில் ஒளியேற்றி வைக்கின்றது.

 • விதைகள் திட்டத்தில் இணைந்து பயன் பெற,அதற்குரிய தகுதிகள் 

 சிறு தொழில் முனைவோர் வேலைவாய்ப்பு,வளர்ச்சித்திட்டம்:[SEEDS-Self Enterpreneur,Employment Development Scheme]:

 • படித்து வேலைவாய்ப்பற்ற,பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ள,சுய தொழில் செய்து கடுமையாக உழைத்து முன்னேற வேண்டும் என்ற ஆர்வமும்,விடாமுயற்சியும் கொண்டு,குழுவாக இணைந்து விதைகள் திட்டம் மூலம் பயன் பெறுங்கள் 
 • சுய தொழில் செய்ய ஆர்வம் உள்ளவரா ?
 • படைக்கும் திறன் ,புதுமை எண்ணம் கொண்டவரா ?
 • சமூகத்தில் வசதியான வாழ்க்கை வாழ வேண்டுமா ?
 • தொழில் முனைவோர் ஆக வேண்டுமா?
 • வாய்ப்புகளை தேடிச் செல்ல வேண்டுமா?

     விதைகள் திட்ட உறுப்பினர் தகுதிகள்:     

 • 18 வயது முதல் 35 வயது வரை உள்ள ஆண்கள்,பெண்கள் 
 • திறன் மேம்பாட்டு பயிற்சி,தொழில் முனைவோர் பயிற்சி பெற விருப்பம் உடையவர்கள் 
 • குழுவோடு இணைந்து துடிப்புடன் செயல்படும் தன்னார்வம் உடைய நபர்கள் 
 • கல்வி தகுதி எதுவும் இல்லை 
 • ஒரே பகுதியில் வசிக்கும் நபர்கள் 

 நிறுவனம் அளிக்கும் பயிற்சிகள்:

 • உறுப்பினர் பயிற்சி 
 • உறுப்பினர் பிரதிநிதி பயிற்சி 
 • தொழிற்பயிற்சி 
 • ஆளுமை திறன் மேம்பாடு 
 • வாழ்வாதாரப் பயிற்சி 
 • களப் பயிற்சி

விதைகள் திட்டத்தில் இணைந்து பயன் பெற விரும்புவர்கள் தொடர்பு கொள்ள :

புதிய தலைமுறை அறக்கட்டளை,
நம்பர்:24,ஜி.என் செட்டி ரோடு, சென்னை-600 017,
தொலைபேசி:  044-28341219,044-3057 87533
கைப்பேசி: 8754417500
மின்னஞ்சல்: contact@ptfindia.org

 • மேலும் புதிய தலைமுறை அறக்கட்டளை, மூலம் பயன் அடைந்தவர்களைப் பற்றிய தகவல்களை அடுத்த பதிவில் பதிவிடுகின்றேன் 
 • விதைகள் திட்டம் பற்றிய ஏதேனும் சந்தேகம்,தங்களுக்கு  ஏற்பட்டால் தயவு செய்து பின்னூட்டத்தில் குறிப்பிடவும் 

Tuesday, January 1, 2013

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.


 •  பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும்,வாசகர்களுக்கும் என் இதயம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். • இந்த புத்தாண்டில் அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சி ஏற்பட,ஏற்றம் பெற்றிட வாழ்த்துக்கள்