Thursday, February 14, 2013

குற்றாலம்
குற்றாலம் என்றாலே நம் நினைவுக்கு வருவது அழகானஅருவி தான் ... வாருங்கள் இவ்விடத்தை பற்றி தகவல்கலை தெரிந்து கொள்வோம்....

குற்றாலம் மேற்குத் தொடர்ச்சி மலையில் இருக்கும் அருவிகள் நிறைந்த பகுதி ஆகும். இது திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பேரூராட்சி ஆகும். இது தென்காசியில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவிலும், திருநெல்வேலியில் இருந்து 55 கிலோ மீட்டர் தொலைவிலும், கன்னியாகுமரியிலிருந்து 137 கிலோமீட்டர் தொலைவிலும், உள்ளது.குறு ஆல் என்பது ஒருவகை ஆலமரம். அத்தகைய மரங்கள் அதிகமாகக் காணப்படும் வனப்பகுதி என்பதால், குற்றாலம் எனும் பெயர் ஏற்பட்டது. இது சிற்றாறு, மணிமுத்தாறு, பச்சையாறு மற்றும் தாமிரபரணி ஆகிய ஆறுகளின் பிறப்பிடமாகும்.

குற்றாலத்தில் மொத்தம் ஒன்பது அருவிகள் இருக்கின்றன. அவை பேரருவி, சிற்றருவி, செண்பகாதேவி அருவி, தேனருவி, ஐந்தருவி, பழத்தோட்ட அருவி , புலியருவி, பழைய குற்றாலம் அருவி, பாலருவி .

இன்னும் குற்றாலம் பற்றிய பல தகவல்களுடன் அடுத்த பதிவில் தொடர்கிறேன் 

Monday, February 11, 2013

இணையதளம் அறிமுகம்

                                   இணையதளம் அறிமுகம்
 • பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். இன்றைய பதிவில் இணையதளம் ஒன்றைப் பற்றி குறிப்பிட விரும்புகின்றேன்.
 • என்னுடைய பதிவு அனைவருக்கும் பயன் படவேண்டும் என்ற சமூக அக்கறையில் இப்பதிவை இடுகின்றேன்
 • இப்பதிவு அனைத்து சென்னை வாழ் மக்களுக்கும் பயன் தரக்கூடியது.

குப்பத்தொட்டி.காம் :

 • அதென்ன குப்பத்தொட்டி.காம் என்று நினைக்கின்றீர்களா.
 • தங்கள் வீட்டில் இருக்கும் குப்பைகளை எடுத்துக்கொண்டு அதற்கு காசு கொடுத்தால் எவ்வாறு இருக்கும்,அதனை செய்கின்றது ஒரு நிறுவனம்
 • அந்த நிறுவனம் தான் குப்பத்தொட்டி.காம் 
 • சென்னை அசோக் நகரில் இயங்கி வருகின்றது இந்நிறுவனம் 
 
 

எந்தெந்த குப்பையை சேகரிக்கிறார்கள் :

 • அலுமினியம்
 • பாட்டரி
 • புத்தகம்
 • வார இதழ்கள்
 • பேப்பர்
 • பாலிதீன் கவர்
 • இரும்பு
 • பிளாஸ்டிக்
 • ஆயில் கவர்

 சென்னையில் உள்ள குப்பைகளை இவர்கள் கீழ்க்கண்ட இடங்களில் இருந்து  சேகரிக்கிறார்கள்:

அந்த இடங்கள்:
 • அபிராமபுரம்
 • ஆதம்பாக்கம்
 • அடையார்
 • அக்கரை
 • ஆலந்தூர்
 • அண்ணாநகர்
 • அரும்பாக்கம்
 • அசோக் நகர்
 • கோடம்பாக்கம்
 • நான் மேலே ஒரு சில இடங்களை மட்டும் தான் குறிபிட்டுள்ளேன்,மேலும் விவரங்களுக்கு அவர்களது இணையதளத்தைப்பாருங்கள்
 
 

நிறுவனத்தை தொடர்புகொள்ள:

 

3வது அவென்யு,
அசோக் நகர்,
சென்னை-83 .
 தொடர்புக்கு:044-42033185

இணையதள முகவரி :

Sunday, February 3, 2013

புதியதலைமுறை வார இதழின் சந்தா

                                    புதியதலைமுறை வார இதழ்

                           
                                   

பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம், நான் இன்றைய பதிவில் புதியதலைமுறை வார இதழின் சந்தா பற்றி கூற விரும்புகின்றேன்.

       புதியதலைமுறை பற்றி அனைவரும் அறிந்து இருப்பீர்கள்  என்று நினைக்கின்றேன். 
இதழாக மட்டும் இல்லாமல், தனக்கான ஒருபாதை,ஒரு பயணம் என்று தனிச்சிறப்புடன் இன்று புதியதலைமுறை வார இதழ் வாரந்தோறும் வெளிவந்து கொண்டிருக்கிறது.

லாபம் மட்டுமே இன்று நோக்கமாகக் கொண்டிருக்கும் மற்ற ஊடகங்களுக்கு மத்தியில்,சமூகத்திற்கு எதாவது செய்ய வேண்டுமே என்ற முனைப்போடு செயல்பட்டு கொண்டிருக்கிறது.

புதியதலைமுறை வார இதழில் வெளிவரும் தொடர்கள்:


தலையங்கம் 
ஆசிரியர் மாலன் எழுதும் என் ஜன்னலுக்கு வெளியே 
 கவிஞர் பா.விஜய் அவர்கள் எழுதும் புலிகளின் புதல்வர்கள் (தொடர்) 
பசுமைப் பக்கங்கள்(விவசாயம் பற்றிய தொடர்)
திரு ரமணன் எழுதும் நீங்களும் ஜெயிக்கலாம்(தொடர்)
நடுப்பக்கம்(போஸ்டர் )
வேலைவாய்ப்பு 
வேலைக்கு செல்லும் பெண்களின் டைரி 
 மேலும் சமூகத்தைப் பற்றிய விழிப்புணர்வுப் பதிவுகள். 

வாசகர்கள் தாங்கள் கொடுக்கும் பைசாவிற்கு மிகவும் மதிப்பு மிக்க இதழ் புதியதலைமுறை மட்டுமே என்பதை என்னுடைய நான்காண்டு கால புதியதலைமுறை வார இதழின் வாசகன் என்ற அனுபவத்தில் சொல்கிறேன். மேலும் அந்த நான்காண்டு கால இதழ்களும் என்னுடைய வீட்டில் பத்திரமாக  சேகரித்து வைத்துள்ளேன். 

புதியதலைமுறை மற்றும் புதியதலைமுறை கல்வி ஆண்டு சந்தா:


புதிய தலைமுறை வார இதழ் ஒன்றின் விலை ரூபாய் 15

ஓர் ஆண்டிற்கு 52 இதழ்கள்  52 *15 = 780
புதியதலைமுறை ஆண்டு சந்தா= 659 ஆக நீங்கள் ஆண்டு சந்தாதாரர் ஆக ஆவதின் மூலம் நீங்கள் சேமிக்கும் தொகை ரூபாய் 121

புதியதலைமுறை கல்வி ஆண்டு சந்தா:

புதிய தலைமுறை கல்வி வார இதழ் ஒன்றின் விலை ரூபாய் 10
ஓர் ஆண்டிற்கு 52 இதழ்கள்  52 *10= 520
புதியதலைமுறை கல்வி ஆண்டு சந்தா=399 ஆக நீங்கள் ஆண்டு சந்தாதாரர் ஆக ஆவதின் மூலம் நீங்கள் சேமிக்கும் தொகை ரூபாய் 121

புதியதலைமுறை மற்றும் புதியதலைமுறை கல்வி இரண்டும் சேர்த்து  ஆண்டு சந்தா: ரூபாய் 949, 
ஆக நீங்கள் ஆண்டு சந்தாதாரர் ஆக ஆவதின் மூலம் நீங்கள் சேமிக்கும் தொகை ரூபாய் 351


வேறு ஏதேனும் புதிய தலைமுறை வார இதழ் ஆண்டு சந்தா பற்றிய சந்தேகம் இருப்பின் பின்னூட்டத்தில் கேளுங்கள்  

               தகவல் அனைவருக்கும்  பயன் உள்ளதாக இருக்கும் என்று நம்புகின்றேன் 
                                                       மிக்க நன்றி                                                                                                           
                                                                                                                                                

                                                                       நட்புடன் வேல் 

Saturday, February 2, 2013

Google Earth - இன் புதிய அம்சங்கள் (வீடியோ இணைப்பு)

        Google Earth - இன் புதிய அம்சங்கள் (வீடியோ இணைப்பு)


அபரிமிதமான இணையத்தள வளர்ச்சியின் காரணமாக மொத்த உலகத்தையும் ஒரு கணினிக்குள் கொண்டுவந்து சாதனை படைத்த கூகுளின் Google Earth சேவை தற்போது புதிய அம்சங்களை உள்ளடக்கியதாக மேம்படுத்தப்பட்டுள்ளது.

முன்னர் காணப்பட்ட சாட்டிலைட் படங்களுடன் மேலும் 1,00,000 வரையான பல்வேறு பிரபலமான இடங்களின் படங்களை உள்ளடக்கி வெளியிடப்பட்டுள்ளதுடன் தற்போது மொத்தமாக 200 வரையான நாடுகளின் நகரங்கள் மற்றும் ஏனைய முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

மேலும் இவ்சேவையினை டெக்ஸ்டாப் கணினிகள் அனைத்திலும் பயன்படுத்தக்கூடியதாக காணப்படுவதுடன் iOS, மற்றும் Android இயங்குதளங்களைக் கொண்ட சாதனங்களிலும் பயன்படுத்தக்கூடியதாகக் காணப்படுகின்றது  குறிப்பிடத்தக்கது.

                                                                                                             நட்புடன் வேல்