Wednesday, March 27, 2013

கணினியில் அழிந்த கோப்புக்களை துல்லியமாக மீட்டெடுப்பதற்கு


கணினியில்  சேமிக்கப்பட்டுள்ள முக்கியமான கோப்புக்கள் தவறுதலாக
அழிந்து விடும்.  அக்கோப்புக்களை துல்லியமாக மீட்டெடுப்பதற்கு
UFlysoft  என்னும் மென்பொருள் பயன்படுகிறது,

இம் மென்பொருள் jpeg, png, gif, bmp, tiff, psd, tga, eps போன்ற ஏராளமான புகைப்படக் கோப்பு வகைகள் உட்பட avi, flv, mp4, mov, wmv, 3pg, mpg போன்ற வீடியோ கோப்புக்கள் மற்றும் mp3, wma, wav, ogg, flac போன்ற ஆடியோக் கோப்புக்களையும் துல்லியமாக மீட்டுத்தருகின்றது.

இம் மென்பொருளை தரவிறக்க http://www.uflysoft.com/photo-recovery-win/


Sunday, March 17, 2013

குப்பத்தொட்டி.காம்


                                   இணையதளம் அறிமுகம்
 • பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். இன்றைய பதிவில் இணையதளம் ஒன்றைப் பற்றி குறிப்பிட விரும்புகின்றேன்.
 • என்னுடைய பதிவு அனைவருக்கும் பயன் படவேண்டும் என்ற சமூக அக்கறையில் இப்பதிவை இடுகின்றேன்
 • இப்பதிவு அனைத்து சென்னை வாழ் மக்களுக்கும் பயன் தரக்கூடியது.

குப்பத்தொட்டி.காம் :

 • அதென்ன குப்பத்தொட்டி.காம் என்று நினைக்கின்றீர்களா.
 • தங்கள் வீட்டில் இருக்கும் குப்பைகளை எடுத்துக்கொண்டு அதற்கு காசு கொடுத்தால் எவ்வாறு இருக்கும்,அதனை செய்கின்றது ஒரு நிறுவனம்
 • அந்த நிறுவனம் தான் குப்பத்தொட்டி.காம் 
 • சென்னை அசோக் நகரில் இயங்கி வருகின்றது இந்நிறுவனம் 

எந்தெந்த குப்பையை சேகரிக்கிறார்கள் :

 • அலுமினியம்
 • பாட்டரி
 • புத்தகம்
 • வார இதழ்கள்
 • பேப்பர்
 • பாலிதீன் கவர்
 • இரும்பு
 • பிளாஸ்டிக்
 • ஆயில் கவர்

 சென்னையில் உள்ள குப்பைகளை இவர்கள் கீழ்க்கண்ட இடங்களில் இருந்து  சேகரிக்கிறார்கள்:

அந்த இடங்கள்:
 • அபிராமபுரம்
 • ஆதம்பாக்கம்
 • அடையார்
 • அக்கரை
 • ஆலந்தூர்
 • அண்ணாநகர்
 • அரும்பாக்கம்
 • அசோக் நகர்
 • கோடம்பாக்கம்
 • நான் மேலே ஒரு சில இடங்களை மட்டும் தான் குறிபிட்டுள்ளேன்,மேலும் விவரங்களுக்கு அவர்களது இணையதளத்தைப்பாருங்கள்

நிறுவனத்தை தொடர்புகொள்ள:

 

3வது அவென்யு,
அசோக் நகர்,
சென்னை-83 .
 தொடர்புக்கு:044-42033185

இணையதள முகவரி :

Sunday, March 10, 2013

சென்னையில் இருபது நாட்கள்:

சென்னையில் இருபது நாட்கள்:

எனது கல்லூரி இறுதி ஆண்டு ப்ராஜெக்ட்திற்காக,கடந்த 10/02/13 அன்று சென்னை கிண்டியில் வந்து இறங்கினேன், இது என்னுடைய ஏழாவது சென்னை பயணம்.

சென்னை மக்களிடம் நான் கற்றுக்கொண்டதும்,பெற்றுக்  கொண்டதும்:

சென்னை மக்களிடம் எனக்கு பிடித்த ஒன்று அவர்களின் சுறுசுறுப்பு, 
அவரவர் தனது வேலையை பார்த்துக் கொண்டு போய்க்கொண்டே இருகின்றார்கள், யாரும் யாரையும் கண்டு கொள்வதில்லை,

எனது அனுபவத்தில் நான் சென்னை மக்களிடம் இருந்து நிறையவே கற்று கொண்டேன், 
ஒருநாள் காலை 5 மணிக்கு சென்னை மவுண்ட் ரயில் நிலையத்தில் இருந்து கோடம்பாக்கம் செல்வதற்காக தொடர்வண்டி பயணசீட்டு 
எடுக்க ரயில் நிலையத்தில் வரிசையில் காத்திருந்தேன், காலை 5 மணிக்கெல்லாம் இவ்வளவு மக்கள் அவரவர் பணியை துவக்குகின்றார்கள். இவர்களின் சுறுசுறுப்பு என்னை மிகவும் அதிகமாக ஈர்த்தது.  

சென்னை மக்களிடம் இருந்து நான் பெற்றுக்  கொண்டதும்:

எனக்கு எந்த ஒரு இடத்திற்கு செல்வதற்கும் வழி தெரியவில்லை என்று  விழித்த போது,நான் வழி கேட்ட நபர்கள் அனைவரும் வழி கூறினார்கள் .


அண்ணாச்சி கடை:

ஊருக்கு திரும்ப வரும்போது  அண்ணாச்சி கடைக்கு(சரவணா ஸ்டோர்) நானும் எனது நண்பனும் சென்றோம், அண்ணாச்சி கடையில் customer தேவையை  அறிந்து அனைத்து பொருள்களையும் குவித்து வைத்து உள்ளார்கள், விலையும் நமது பட்ஜெட்டிற்கு ஏற்றாற்போல் உள்ளது,

இறுதியாக சென்னையைப் பற்றி என்னுடைய சிறு கவிதை:

வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் 

"பிழைக்க வந்தாரை கரை சேர்ப்பதில் சென்னை ஒரு சரித்திரம்" 

தமிழகத்தின் தலைநகரம் 

"இன்று பல இளைய தலைமுறைகளின் வசிப்பிடம்" 

கல்வி கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு 

"சென்னையை நம்பி வந்தோர்க்கு வாழ்வில் ஏற்றம் தரும் ஊர் என்பது தனிச் சிறப்பு"


Thursday, March 7, 2013

மென்பொருள் அறிமுகம்:


மென்பொருள் அறிமுகம்:

   

பென்டிரைவில் உள்ள நமது அழித்த கோப்புகளை மீட்டெடுக்க உதவும் அருமையான ஒரு மென்பொருள்
EaseUS Data Recovery Wizard 5.8.0.

மென்பொருளின் சிறப்புக்கள்:

நாம் நம்முடைய அளித்த கோப்புகளை முழுமையாக இம்மென்பொருள் மூலம் பெற முடியும்.

மென்பொருளின் மொத்த அளவே 6 எம்பி மட்டுமே

தரவிறக்குவது மிகவும் எளிது.

தரவிறக்க:

Easeus.com
என்ற இணைய முகவரிக்கு செல்லுங்கள், சென்ற உடன் முதல் பக்கத்திலேயே EaseUS Data Recovery Wizard 5.8.0.மென்பொருளின் EaseUS Data Recovery Wizard 5.8.0.முகப்பு தோற்றம் தெரியும்
அதன் பிறகு அதில் ReadMore  என்பதை கிளிக் செய்யுங்கள்அதன் பின்பு அதற்கு அடுத்து வரும் விண்டோவில் டவுன்லோட் என்பதை கிளிக் செய்து தரவிறக்கம் செய்து உங்களது கணினியில் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்மென்பொருளை எவ்வாறு பயன்படுத்துவது:
இப்போது மென்பொருளை ஓபன் செய்து கொண்டு அதில்
Complete Recovery என்பதை கிளிக் செய்யுங்கள் அதன்பின்பு
Search All lost Files Automatically
என்பதை கிளிக் செய்து Next என்பதை கிளிக்


இந்த விண்டோவில் தோன்றும் Complete Recovery என்பதை கிளிக் செய்யுங்கள்அதன்பின்பு search all lost  files automatically  என்பதை கிளிக் செய்து next என்பதை அழுத்துங்கள்

அதன்பின்பு தங்களுடைய pendrive வை செலக்ட் செய்து கொண்டு  next என்பதை அழுத்துங்கள்
அடுத்து வரும் விண்டோவில்  தங்களுடைய அழித்தகோப்புகள் அனைத்தும் திரும்ப கிடைக்கும்,

முக்கிய தகவல்: இந்த மென்பொருளை பயன்படுத்தி டேட்டா recovery செய்யும் போது product key கேக்கும், அதற்கு தாங்கள் நான் தரும் இந்த 
product keyyai {
IL9SW-3YE3M-LSMR8-PCDHB-L7FDL} உபயோகித்து கொள்ளுங்கள்
product key யை activate செய்யாமல் இந்த மென்பொருளை பயன் படுத்த முடியாது