புதிய தலைமுறை

                       சத்தமில்லாமல் ஒரு சமூகப்பணி 

                                                                                   இனி ஒரு விதி செய்வோம் 

 • நான் இந்த பதிவில் புதியதலைமுறை வார இதழ் பற்றி குறிப்பிட விரும்புகின்றேன்,பதிவர்கள் அனைவருக்கும் மிகவும் பரிச்சயமான இதழ்தான் என்றாலும்,புதியதலைமுறையின் இன்னொரு சமூகப் பணியை பற்றி இந்த பதிவில்  குறிப்பிடுகிறேன் .

புதிய தலைமுறை அறக்கட்டளை : 

 • இளைஞர்களை மையமாகக் கொண்டு  ஓர் அமைதியான,வளமான,மகிழ்ச்சியான சமுதாயத்தை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் உருவாக்குவதே புதியதலைமுறை அறக்கட்டளையின் குறிக்கோள் ஆகும்,
 • புதியதலைமுறை அறக்கட்டளை ஒரு அரசுசாரா தொண்டு நிறுவனமாகும் 
 • புதிய தலைமுறை வார இதழ் ஓராண்டை நிறைவு செய்த பின்,(நவம்பர் 11,2010)அன்று புதிய தலைமுறை அறக்கட்டளை ஆரம்பிக்கப்பட்டது 

      என்ன செய்தோம் :


 • தமிழகம் மற்றும் புதுச்சேரியில்  இதுவரை  800க்கும் மேற்பட்ட  சமூக விழிப்புணர்வு நிகழ்சிகளை நடத்தியும்,150க்கும் மேற்பட்ட கல்வி மேம்பாட்டு மையங்களை, 3 இளைஞர் திறன் மேம்பாட்டு மையங்களை துவக்கி செவ்வனே செயல்பட்டு வருகின்றது 

புதியதலைமுறை அறக்கட்டளை அறங்காவலர்: 


 •  புதிய தலைமுறை வார இதழின் நிர்வாக ஆசிரியர் திரு.ஆர்.பி.சத்தியநாராயணன்.அண்ணாப் பொறியியல் பல்கலைக் கழகத்தில் பொறியியல் பட்டமும்,அமெரிக்காவின் பாஸ்டன் நகரத்தில் உள்ள நார்த் ஈஸ்டன் பல்கலைக் கழகத்தில் முதுநிலைப் பட்டமும் பெற்றவர்.
 • திரு.ஆர்.பி.சத்தியநாராயணன்   அவர்கள் சமூகநலப் பணிகளில் ஆர்வம் கொண்ட இளைஞர் 


புதியதலைமுறை அறக்கட்டளையின் செயல் திட்டங்கள்:
 • புதிய தலைமுறை வாசகர் வட்டம் 
 • விதைகள் 
 • இலவச உயர் கல்வி 
 • கிராமப்புற கல்வி மேம்பாடு
 • இளைஞர் திறன் மேம்பாடு 

புதியதலைமுறை அறக்கட்டளையின் 18 நிர்மானப் பணிகள்:
 • 1.மரம் நடுதல் 
 • 2.புகையிலை தடுப்பு மற்றும் புற்றுநோய் விழிப்புணர்வு 
 • 3.சாலைப் பாதுகாப்பு மற்றும் முதலுவதி 
 • 4.சுற்றுச் சூழல்-புவி வெப்பமயமாதல்,மழைநீர் சேகரிப்பு 
 • 5.ஆளுமை திறன் மேம்பாடு 
 • 6.வேலைவாய்ப்பு முகாம் 
 • 7.தேர்வுகளை எதிர் கொள்வது எப்படி 
 • 8.சுய வேலைவாய்ப்பு பயிற்சி 
 • 9.இரத்த தான முகாம் 
 • 10.கண்,பல்,சருமம் மற்றும் பொது மருத்துவ முகாம் 
 • 11.நல்ல உணவு பழக்க வழக்கங்கள் 
 • 12.மின்சாரம் மற்றும் எரிசக்தி-சிக்கனம்,பாதுகாப்பு 
 • 13.இயற்கை வேளாண்மை 
 • 14.அடிப்படை கணினி 
 • 15.தகவல் அறியும்   சட்டம் 
 • 16.  நூலகம்  பயன்  படுத்துதல் 
 • 17.நுகர்வோர் பாதுகாப்பு 
 • 18.உயர்கல்வி வழிகாட்டி 
                
 •               மேலும் அடுத்தப்பதிவில் புதியதலைமுறை அறக்கட்டளையின் பல்வேறு சமூக நலப் பணிகளை இன்னும் விரிவாகப் பதிவிடுகிறேன்,